Sunday, 20 March 2016

சிலுவை



இடலை செக்கிட்டு பிழிந்திடும் இடம்கொண்டு,
மனதை வியாகுலம்மிட்டு பிழிந்திடும் பாரமேனோ,
பிழிந்திடும் எண்ணையில் காயம் கட்டுவார்,
வடிந்திடும் குருதியில் எம்துயர் கட்டுவீரோ.


                     பரமன் கண்மறைத்து இருள் கம்பலம்மிட,
                     துஷ்டர் தூஷித்து உமிழ்ந்து அறைந்திட,
                     சத்தமிடா செம்மறியே எம் அவமானம்,
                     ஒழித்திட ஓர் திட்டம் கொண்டிரோ.

பெரும்பல இராஜியம் கழிந்திட காத்தீர்,
பரமன் சித்தமென ரோமர் குடிபுகுந்தீர்,
பாவத்தின் உடல் வாதை அகற்றிட,
குருதிக்குழல் உடைத்து அகம் சிதைத்தீரோ.
 
                    திரைசூழ் மாந்தர் பலர் உண்டு,
                    அவர் செய்தற்பாவம் கோடி உண்டு,
                    வழுவாது காத்திடல் யார் உண்டு,
                    கழுமரம் ஏறி காத்தவர் அவர் உண்டு.

இடலை : Olive
இடலை செக்கிட்டு பிழிந்திடும் இடம்கொண்டு : The place where olive is crused to make oil (

Gethsemane)


Wednesday, 19 August 2015

முதுமை

முதுமை







கன்னத்தில் பதித்த மை மறையும் முன்பு,
காலம் இட்ட மை(முதுமை) எம் இமைய்யோரம் கிளைவிட்டது,
கால சக்கரத்தில் சிக்குண்ட சிலந்தி ஆகிப்போநோம்,
எம் இனம் காக்க மகிமை ஒன்றுகொண்டு,
மறுரூபம் ஆகிட கிருபை அருளிடும் எம் அருள்நாதா.

Saturday, 8 August 2015

PLUTO

PLUTO






வித்தை ஒன்று கற்று,
நத்தை ஒன்று செய்து ,
விண்ணில் ஊர்ந்து செல்ல,
காதில் மொனகி நின்றேன்,
நவ ஆண்டுகள் கழித்து,
சத்தம் ஒன்று கேட்க,
புருவம் உயர்த்தி கண்கள் பிதுக்கி காத்து நின்றேன்,
உலகம் பார்க்க ஒரு நிழல் கொண்டேன்,
ப்ளூட்டோ.

Friday, 7 August 2015

Globalisation and industrialisation

கவிதை 2: என் தாய் பரிசுத்தமானவள்.




எம் தாயின் எழில் அறிவேன்,
அவள் கொண்ட செல்வமும் அறிவேன்,
முலைப்பாலின் ருசி அறிந்தேன்,
அவள் மாரில் சாய்ந்த சுகமும் அறிந்தேன்,
அனைத்தும் அறிந்த நான்.
விற்றேன் தாசியாக அயலானுக்கு.
மன்னிப்பாய எம்பெரும்மானே.


விளக்கம்:

எழில் : Beauty of my Nation ( Seasons , mountains , Rivers and many more )
செல்வம் : Richness ( Natural Resources )
முலைப்பால் : Yields from Forest & Land
தாசியாக : Prostitute. 
உறைந்த இரும்புத் தகடுகள்

Please Register your views .........


கவிதை :1 AF  447, MH 307

 AF 447
 
 MH 370
 


விண்ணில் பாயிந்து உறைந்த இரும்புத் தகடுகள்,
கண்ணின் உப்பு தண்ணீரையும் உறைத்தது,
ஆழியின் உப்புசாரம் பெரியதா,
மக்களின் கண்ணீரின் உப்புச்சாரம் பெரியதா,
செப்பிடும் எம்பெருமானே.